/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரைசிங் ஸ்டார், இந்தியன் வங்கி மாநில கூடைப்பந்தில் 'சாம்பியன்'
/
ரைசிங் ஸ்டார், இந்தியன் வங்கி மாநில கூடைப்பந்தில் 'சாம்பியன்'
ரைசிங் ஸ்டார், இந்தியன் வங்கி மாநில கூடைப்பந்தில் 'சாம்பியன்'
ரைசிங் ஸ்டார், இந்தியன் வங்கி மாநில கூடைப்பந்தில் 'சாம்பியன்'
ADDED : டிச 05, 2024 12:24 AM

சென்னை, மாநில அளவில் நடந்த சீனியர் கூடைப்பந்து போட்டியில், பெண்களில் ரைசிங் ஸ்டார், ஆண்களில் இந்தியன் வங்கி அணிகள், 'சாம்பியன்' பட்டங்களை தட்டிச் சென்றன.
தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், அந்தந்த மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் தேர்வான அணிக்கான, 74வது மாநில சீனியர் கூடைப்பந்து போட்டி, கடந்த 27ம் தேதி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் துவங்கியது.
போட்டியில், ஆண்களில் 18 அணிகளும், பெண்களில் 16 அணிகளும், 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் மோதின. இடையில், புயல் மழையால் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.
தொடர்ந்து, நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டி, பெண்களுக்கான ஆட்டத்தில், சென்னையை சேர்ந்த ரைசிங் ஸ்டார் கிளப் மற்றும் வருமான வரி அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான போட்டியில், ரைசிங் ஸ்டார் அணி, 58 - 57 என்ற ஒரு புள்ளி வித்தியாசத்தில், வருமான வரி அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஆடவருக்கான ஆட்டத்தில், இந்தியன் வங்கி மற்றும் வருமான வரி அணிகள் மோதின.
அதில், 70 - 57 என்ற அபார புள்ளிக் கணக்கில், இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. போட்டியில் வெற்றி பெற்று முதலிடங்களை பிடித்த இருபாலர் அணியில், தலா 12 பேர் தேர்வு செய்து, தமிழக அணியாக, தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளனர்.