ADDED : பிப் 04, 2024 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்ன போரூர்:வளசரவாக்கம் மண்டலம் 151வது வார்டு பூத்தப்பேடில் உள்ள அண்ணா தெரு, வளசரவாக்கம் - ராமாபுரம் - போரூர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையில் உள்ளது.
ஆற்காடு சாலை மற்றும் மவுன்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால், இச்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.
குறுகலான இச்சாலையில், காலை மற்றும் மாலை வேளைகளில், வாகனங்கள் வரிசை கட்டி நிற்பது வாடிக்கை. இங்கு மழைநீர் வடிகால் மேல் மூடி சில நாட்களுக்கு முன் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் கண்டுக் கொள்ளாமல் உள்ளனர்.