/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டென்னிஸ் இறுதி போட்டி ரித்தின் பிரணவ் தகுதி
/
டென்னிஸ் இறுதி போட்டி ரித்தின் பிரணவ் தகுதி
ADDED : ஜூலை 26, 2025 12:14 AM
சென்னை :சீனியர் டென்னிஸ் இறுதி போட்டிக்கு, தமிழகத்தின் ரித்தின் பிரணவ் தகுதி பெற்று ள்ளார்.
அகில இந்திய டென்னிஸ் சங்கம், தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து, தேசிய அளவில் இருபாலருக்கான சீனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியை, நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் வளாகத்தில் நடத்துகின்றன.
இதன் அரையிறுதி போட்டிகள் நேற்று நடந்தன. அதில் தமிழகத்தின் ரித்தின் பிரணவ், ஹரியானாவின் அஜய் மாலிக்குடன் மோதினார்.
முதல் செட் 6 - 3 என்ற புள்ளியில் வென்ற ரித்தின் பிரணவ், தொடர்ந்து அடுத்த செட்டையும் 6 - 2 என்ற புள்ளியில் கைப்பற்றி, எதிர்த்து விளையாடிய அஜய் மாலிக்கை வீழ்த்தி, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு அரையிறுதி போட்டியில், கர்நாடகாவின் ரிஷி ரெட்டி, மற்றொரு கர்நாடகாவின் தீபக்கை எதிர்த்து விளையாடினார். இதில் ரிஷி ரெட்டி 5 - 7, 6 - 1, 6 - 0 என்ற செட் புள்ளியில் வென்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடக்கும் இறுதி போட்டியில், தமிழகத்தின் ரித்தின் பிரணவ், கர்நாடகவின் ரிஷி ரெட்டி களம் காண்கின்றனர்.