/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆர்.எம்.கே.வி., நுாற்றாண்டு விழா புது ரக பட்டு புடவைகள் அறிமுகம்
/
ஆர்.எம்.கே.வி., நுாற்றாண்டு விழா புது ரக பட்டு புடவைகள் அறிமுகம்
ஆர்.எம்.கே.வி., நுாற்றாண்டு விழா புது ரக பட்டு புடவைகள் அறிமுகம்
ஆர்.எம்.கே.வி., நுாற்றாண்டு விழா புது ரக பட்டு புடவைகள் அறிமுகம்
ADDED : அக் 01, 2024 12:52 AM

சென்னை,பட்டு புடவை தயாரிப்பில் முத்திரை பதித்து வரும் ஆர்.எம்.கே.வி., நிறுவனத்தின் நுாற்றாண்டு விழா, அடையாறு, காந்தி நகரில் நேற்று நடந்தது.
இதை முன்னிட்டு, 11 புது ரக பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தி, ஆர்.எம்.கே.வி., இயக்குனர்களான ஷங்கர் குமாரசாமி, மாணிக்கவாசகம், மகேஷ் ஆகியோர் கூறியதாவது:
தமிழகம் முழுதும் ஆம்.எம்.கே.வி., நிறுவனத்திற்கு ஏழு கிளைகள் உள்ளன. சென்னையில் மூன்று கிளைகள் உள்ளன.
கடந்த 1924ல் திருநெல்வேலியில், விஸ்வநாதபிள்ளையால் ஆர்.எம்.கே.வி.,யின் முதல் கடை திறக்கப்பட்டது. இந்தாண்டு நுாற்றாண்டு விழா கண்டுள்ளது.
முதன்முதலில் 'சின்னஞ்சிறு கிளியே' புடவை அறிமுகப்படுத்தினோம். அது இன்றளவில் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இதுவரை, 100 புடவைகளுக்கு மேல் அறிமுகம் செய்திருக்கிறோம்.
நுாற்றாண்டை முன்னிட்டு, 11 தனித்துவம் வாய்ந்த கைத்தறி பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இதில், 4,000 விதமான இயற்கை வர்ணங்கள் கொண்ட பட்டுப்புடவை சாதனை படைப்பாக அறிமுகம் செய்துள்ளோம். கற்பக விருட்சம் பட்டுப் புடவையில், முந்தானையில் ஜரிகையால் கற்பகவிருட்சம் நெய்யப்பட்டுள்ளது.
அடுத்ததாக உலகின் வண்ணம் என அறியப்பட்ட, 'பீச் பஸ்' எனப்படும் செஞ்சந்தன வண்ணத்தை ஞானத்திற்கும், அமைதிக்கும் அடையாளப்படுத்தி அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இந்த மூன்று பட்டு புடவைகளும் கடுக்காய், நெல்லி, மாதுளை, மல்பரி, மரப்பிசின் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட தாவரங்கள், தாதுக்கள் பயன்படுத்தி இயற்கை வண்ணங்களை உருவாக்கி தயாரித்துள்ளோம். புடவைகள் குறைந்தபட்சம், 20,000 ரூபாய் முதல் 77,000 ரூபாய் வரை உள்ளன. அனைத்து விற்பனையகங்களிலும் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆர்.எம்.கே.வி., மேலாண் இயக்குனர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.