/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாரிய ஆபீஸ் பின்புற சாலை வாகனங்களால் ஆக்கிரமிப்பு
/
வாரிய ஆபீஸ் பின்புற சாலை வாகனங்களால் ஆக்கிரமிப்பு
ADDED : பிப் 04, 2025 11:57 PM
சென்னை,சென்னை அண்ணா சாலையில், தமிழக மின் வாரிய தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு, 3,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.
இந்த அலுவலகத்தின் பின்புறம், கூவம் இணைப்பு சாலை செல்கிறது. இந்த சாலை, பின்னி சாலையில் உள்ள தாஜ் கன்னிமாரா ஓட்டல் எதிரில் துவங்கி, அண்ணா சாலை தர்கா அருகில் நிறைவடைகிறது.
மின் வாரிய பணியாளர்கள் பயன்படுத்தவே, பல ஆண்டுகளுக்கு முன் கூவம் இணைப்பு சாலை உருவாக்கப்பட்டது. அந்த சாலையில்தான், காயிதே மில்லத் மணிமண்டபமும் அமைந்துள்ளது.
தற்போது, கூவம் இணைப்பு சாலையின் இருபுறமும் தனியார் வாடகை கார்கள், வேன்கள், கிரேன்கள் உள்ளிட்டவை ஆக்கிரமித்து உள்ளன. இதுதவிர, அந்த சாலையில் இரவில் கட்டட கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து, மின் ஊழியர்கள் கூறுகையில், 'இணைப்பு சாலையில், லாரி, பஸ் செல்லும் வகையில் இடவசதி உள்ளது; ஆனால், அந்த சாலையை எந்நேரமும் தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளன. எனவே, அந்த சாலையில், வாகனங்கள் சிரமமின்றி செல்ல, ஆக்கிரமித்துள்ள வாகனங்களை அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.