தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கண்ணகி நகரில் சாலை உள்வாங்கி பள்ளம் விழுந்ததால் தடுமாற்றம்

 கண்ணகி நகரில் சாலை உள்வாங்கி பள்ளம் விழுந்ததால் தடுமாற்றம்

 கண்ணகி நகரில் சாலை உள்வாங்கி பள்ளம் விழுந்ததால் தடுமாற்றம்


ADDED : மார் 19, 2026 10:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 10:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கண்ணகி நகர்: குழாய் பதித்த பகுதிகளில், உள்வாங்கிய பள்ளங்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கண்ணை நகர் பகுதியில், குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, கண்ணகி நகர் பிரதான சாலை, உட்புற சாலைகளில், குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளத்தை முறையாக பலப்படுத்தி மூடவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், குழாய் பதித்த பகுதிகளில் மழைநீர் புகுந்து, சாலை உள்வாங்கி பள்ளமாகி உள்ளது.

நேற்று அதிகாலை, சில வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கினர். பகுதி மக்கள் புகார் அளித்தும், நேற்று மாலை வரை, குடிநீர் வாரிய அதிகாரிகள், ஒப்பந்த நிறுவனங்கள் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்கவில்லை.

அசம்பாவிதம் நடக்கும் தடுக்கும் வகையில், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை முறையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us