/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை அமைத்து ஒரே மாதத்தில் மெட்ரோ பணிக்காக பள்ளம்
/
சாலை அமைத்து ஒரே மாதத்தில் மெட்ரோ பணிக்காக பள்ளம்
ADDED : ஜூலை 30, 2025 12:37 AM

புழுதிவாக்கம்,புழுதிவாக்கத்தில், புதிதாக அமைத்து ஒரு மாதம் கூட நிறைவுபெறாத சாலையில், குடிநீர் குழாய் சீர் செய்ய, மெட்ரோ துறையினர் பள்ளம் தோண்டிஉள்ளனர்.
பெருங்குடி மண்டலம், வார்டு 186க்கு உட்பட்டது புழுதிவாக்கம். இங்கு அமைந்துள்ள கணேஷ் நகர் பிராதன சாலை, புதிதாக அமைத்து முழுமையாக ஒரு மாதம் கூட நிறைவு பெறவில்லை.
இந்நிலையில், குடிநீர் குழாய் சேதமடைந்து, நீர் வெளியேறியது. அதை சீர் செய்ய, நேற்று முன்தினம் மெட்ரோ துறை சார்பில், அந்த சாலையில் பள்ளம் தோண்டப்பட்டது.
ஆனால், மூன்று நாட்களாகியும் அதை சீர் செய்யாமல், பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி, மழைநீர் போக்கு கால்வாயில் கலந்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயை உடனடியாக சீர்செய்து, சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியில் குடியிருப்போர் வலியுறுத்தியுள்ளனர்.