ADDED : ஜன 18, 2025 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆலந்துார், ஆலந்துார் மண்டலத்தில் புதிதாக, பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
இதில், ஆலந்துார், நங்கநல்லுார், ஆதம்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை பிரதான குழாய் மாற்றியமைக்கும் பணிகள், மின் வாரிய பணிகளும் நடந்தன.
இதற்காக, பேருந்துக்கள் செல்லும் பிரதான வழித்தட சாலைகள் பல தோண்டப்பட்டன. சாலை படுமோசமான நிலைக்கு மாறியதால், வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, இந்த நிதி ஆண்டில், சாலை வெட்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, மாநகராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில், 156வது வார்டில் 68.5 லட்சம் ரூபாயும்; 164வது வார்டில் 15.98 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. நங்கநல்லுார், 167வது வார்டில் 17.2 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.