ADDED : ஜன 31, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிந்தாதிரிப்பேட்டை, ராயபுரம் மண்டலம் சிந்தாதிரிப்பேட்டையில், துணைமேயர் கபால மூர்த்தி சாலை உள்ளது. இச்சாலையில் சிம்சன் பஸ் நிறுத்தம் அருகே பள்ளம் ஏற்பட்டது.
இப்பள்ளத்தை சீரமைக்க மாநகராட்சியோ, குடிநீர் வாரிய அதிகாரிகளோ முன்வரவில்லை.
இதனால் அவ்வழியாக செல்லும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மட்டுமின்றி, இதர வாகன ஓட்டுநர்களும், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை மாநகராட்சியினர் சீரமைத்தனர். தற்போது அவ்வழியாக, வாகனங்கள் எந்தவித சிரமம் இன்றி கடந்து செல்கின்றன.