ADDED : பிப் 08, 2024 12:09 AM

அ நிறம் | அளவு
பூந்தமல்லி, பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் சார்பில் வாகன ஓட்டிகள் 'ஹெல்மெட்' அணிவது குறித்து, மாணவர்களுடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இதில், 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் போலீசார் ஹெல்மெட் அணிந்தபடி, வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர். அதேபோல, ஆவடியில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை, ஆவடி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் துவக்கி வைத்தார்.
இதில், பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தனியார் கல்லுாரி மாணவியர், ஆவடி சின்னம்மன் கோவில் முதல் பருத்திப்பட்டு வரையிலான பேரணியில் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
