ADDED : ஜன 30, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர், சுங்கச்சாவடி சந்திப்பு துவங்கி, எண்ணுார் பாரதியார் நகர் வரையிலான, 5 கி.மீ., துாரம், எண்ணுார் விரைவுச் சாலையை, தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
இச்சாலையை ஒட்டி, பல மீனவ கிராமங்கள் உள்ளன.
அப்பகுதியைச் சேர்ந்தோர், மார்க்கெட், மருத்துவமனை, கல்வி நிலையங்களுக்கு செல்வதற்கு, எண்ணுார் விரைவுச் சாலையை கடக்க வேண்டியுள்ளது. நான்குவழிச் சாலையான எண்ணுார் விரைவுச் சாலையை கடப்பதற்குள், பாதசாரிகள் விபத்தில் சிக்க நேரிடுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விபத்து அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு, வேகத்தடை அமைக்க வேண்டும்.
- ஏழுமலை
பாரதியார் நகர், எண்ணுார்