ADDED : மார் 19, 2026 05:52 AM

அ நிறம் | அளவு
மதுரவாயல்: மதுரவாயல் பகுதியில் குழாய் உடைந்ததால், குடிநீர் வீணாகி, சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளது.
வளசரவாக்கம் மண்டலம், 144வது வார்டு, மதுரவாயல் எம்.எம்.டி.ஏ., காலனி முதல் பிரதான சாலையில், துணை மின் நிலையம் உள்ளது.
கடந்த ஆண்டு, கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, இச்சாலையில் பெரிய பள்ளம் உருவானது. அதை குடிநீர் வாரிய அதிகாரிகள் சீரமைத்தனர்.
தற்போது, குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு வெளியேறும் குடிநீர், சாலையில் தேங்கி வீணாகி வருகிறது.
தவிர, அப்பகுதி முழுதும் சேறும் சகதியுமாக மாறி, வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
