/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை பணி அரைகுறை மக்கள் மீண்டும் தவிப்பு
/
சாலை பணி அரைகுறை மக்கள் மீண்டும் தவிப்பு
ADDED : ஜன 21, 2026 05:44 AM

வில்லிவாக்கம்: வில்லிவாக்கம் ரயில்வே அணுகு சாலையில் 100 மீட்டருக்கு அரைகுறையாக விடுபட்ட சாலை பணிகளை முடிக்காததால், பகுதி மக்கள் மீண்டும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ரயில்வே அணுகு சாலை உள்ளது. ரயில்வேக்கு சொந்தமான இந்த சாலையின் ஒரு பகுதியில், வில்லிவாக்கம் சந்தை செயல்படுகிறது.
இந்த சாலையை கடந்து, வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.
பல ஆண்டுகளாக குண்டும், குழியுமான இச்சாலை குறித்து, நம் நாளிதழில் சுட்டிக்காட்டிய பின், 2024ல் சீரமைப்பு பணிகளை ரயில்வே துவங்கியது. அங்கு, 600 மீ., சாலையில், 500 மீ., மட்டும் கான்கிரீட் சாலை அமைத்து, 100 மீட்டர் அரைகுறையாக விடப்பட்டது.
தற்போது வரை சீரமைக்கப்படாததால், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, சாலை படுமோசமாக மாறிவிட்டது. மழைக்காலத்தில் 100 மீட்டர் சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
ரயில்வே சாலையில் அரைகுறையாக விடுபட்ட பணிகளை, விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

