/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையோர ஆக்கிரமிப்புகள் ஆவடியில் அகற்றம்
/
சாலையோர ஆக்கிரமிப்புகள் ஆவடியில் அகற்றம்
ADDED : டிச 19, 2025 05:20 AM

ஆவடி: சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, ஆவடி செக்போஸ்ட் முதல் பட்டாபிராம் வரை, சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இது குறித்து, நெடுஞ்சாலைத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
குறிப்பாக, செக்போஸ்ட் முதல் பட்டாபிராம் வரை, 3.50 கி.மீ., துாரத்துக்கு சாலையை ஆக்கி ரமித்து போடப்பட்டு இருந்த பழ கடைகள், காய்கறி கடைகள், இளநீர் கடைகள், டிபன் கடை, மீன், கருவாட்டு கடைகள் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட கடைகளை அகற்ற, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இருப்பினும், வியாபாரிகள் கடைகளை அகற்றாததால், நேற்று காலை நெடுஞ்சாலை துறை இளநிலை பொறியாளர் ராமச்சந்தி ரன் தலைமையிலான குழுவினர், சாலையோர கடைகளை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பொக்லைன் இயந்திரம், லாரியுடன் அதிகாரிகள் வருவதை கண்ட சாலையோர வியாபாரிகள் பலர், தாமாக முன்வந்து கடைகளை பிரித்து, தங்கள் வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். இந்த நடவடிக்கை தொடரும் என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

