/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோர மின்கம்பங்கள்
/
போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோர மின்கம்பங்கள்
ADDED : மார் 04, 2024 02:00 AM
புழுதிவாக்கம்:பெருங்குடி மண்டலம், 186வது வார்டுக்கு உட்பட்டது புழுதிவாக்கம். இங்கு, பாலாஜி நகர் விரிவு பிரதான சாலையில், பல ஆண்டுகளுக்கு முன், சென்னை குடிநீர் வாரியத்தால், சாலையின் இரு பக்கமும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
இதனால், 30 அடி அகலம் இருந்த சாலை 18 அடியாக குறுகியது. அதன்பின், சாலையோரத்தில் எட்டு எல்.இ.டி., மின்விளக்கு கம்பங்கள் அடுத்தடுத்து அமைக்கப்பட்டன. இதனால், சாலை மேலும் குறுகியது.
இதனால், இவ்வழியாக மாநகர பேருந்துகள் மற்றும் கழிவுநீர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் பயணிப்பதால், 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த மின்விளக்கு கம்பங்கள் அனைத்தையும்,சாலையோரம் 7 அடி துாரம் தள்ளி நடுவதற்கு போதிய இடவசதி உள்ளது. அவ்வாறு செய்தால், சாலையின் அகலம் அதிகரிக்கும்.
இதனால், நடைமேடையில் பாதசாரிகள் நடந்து செல்ல முடியும். மேலும், போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு கிடைக்கும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

