/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையோர வியாபாரிகள் ---- கடை வணிகர்கள் திடீர் மோதல் வண்ணாரப்பேட்டையில் பதற்றம்
/
சாலையோர வியாபாரிகள் ---- கடை வணிகர்கள் திடீர் மோதல் வண்ணாரப்பேட்டையில் பதற்றம்
சாலையோர வியாபாரிகள் ---- கடை வணிகர்கள் திடீர் மோதல் வண்ணாரப்பேட்டையில் பதற்றம்
சாலையோர வியாபாரிகள் ---- கடை வணிகர்கள் திடீர் மோதல் வண்ணாரப்பேட்டையில் பதற்றம்
ADDED : நவ 16, 2025 03:01 AM

வண்ணாரப்பேட்டை: கடை வணிகர்கள் -- சாலையோர வியாபாரிகளிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், வண்ணாரப்பேட்டையில் பதற்றம் ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வண்ணாரப்பேட்டை, எம்.சி., சாலையில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கும் பணி நடக்கிறது.
இதனால், சாலையோர வியாபாரிகள் சாலையின் நடுவே கடை வைத்துள்ளனர்.இதனால் பொதுமக்கள் நடந்து செல்லவும், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. வியாபாரம் பாதிக்கப்பட்டதை அடுத்து, வணிகர்கள் சாலையோர கடைகளை அகற்ற வேண்டும் எனக் கூறினர்.
அதில் வணிகர்கள், சாலையோர வியாபாரிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் சமாதானம் செய்ய முயன்ற நிலையில், இருதரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
அப்போது, வணிகர்களில் ஒருவர் சாலையோர வியாபரியான விஜயலட்சுமி என்ற பெண்ணை அடித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து, சாலையோர வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் பாஸ்கர், அவர்களிடம் பேச்சு நடத்தினார். தொடர்ந்து ராயபுரம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில், வியாபாரிகளுடன் எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி சமரச பேச்சு நடத்தினார்.
அதில் விதிமுறைப்படி கோடு போடப்பட்டு, சாலையோர வியாபாரிகள், சாலையோரத்தில் 'ஆறுக்கு ஆறு' அடியில் கடைகள் அமைக்கவும், சாலையின் நடுவே வாகனங்கள் நிறுத்தக்கூடாது எனவும் தெரிவித்தார்.
அப்போது, 'வணிகர்கள் கடை களில் வேலை செய்யும் ஊழியர்கள், பொதுமக்களின் கையை பிடித்து, இழுத்து எங்கள் கடைக்கு வாருங்கள்' எனக் கூறி வருகின்றனர். இதை தடுக்க வேண்டும் என, சாலையோர வியா பாரிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு, போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து வியாபாரிகள் சமாதானமாக சென்றனர்.

