sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 பெண்களிடம் செயின் பறித்த பலே கொள்ளையன் கைது

/

 பெண்களிடம் செயின் பறித்த பலே கொள்ளையன் கைது

 பெண்களிடம் செயின் பறித்த பலே கொள்ளையன் கைது

 பெண்களிடம் செயின் பறித்த பலே கொள்ளையன் கைது


ADDED : ஜன 23, 2026 05:56 AM

Google News

ADDED : ஜன 23, 2026 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த முள்ளிகொளத்துார் பகுதியில், கடந்த 7ம் தேதியும், நத்தம் கரியச்சேரி பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும், வெவ்வேறு பெண்களிடம், இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம வாலிபர், தங்க சங்கலியை பறித்துக் கொண்டு தப்பினார்.

இச்சம்பவம் தொடர்பாக, திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிந்து, தேடி வந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், சீத்தனஞ்சேரியைச் அடுத்த குறுவஞ்சேரி பகுதியை சேர்ந்த வினோத்குமார், 30, இக்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையடுத்து, தனிப்ப டை போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.

திருக்கழுக்குன்றம் போலீசார் கூறியதாவது:

ஒரே இடத்தில், அரை மணி நேரத்திற்கு மேல் தங்காமல் இடம் மாறியதால், இருப்பிடம் தெரிந்தும் பிடிப்பது சவாலாக இருந்தது. வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியில் இருப்பது தெரிந்து, விரைந்து சென்று பிடித்தோம்.

செங்கல்பட்டு, விழுப்புரம் உ ள்ளிட்ட மாவட்டங்களில், 40க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது உள்ளன. 4.25 சவரன் நகை, இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us