தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வழிப்பறி ரவுடி கைது

வழிப்பறி ரவுடி கைது

வழிப்பறி ரவுடி கைது


ADDED : அக் 26, 2024 02:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2024 02:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:சிந்தாதிரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே, கத்தி முனையில் வாலிபரிடம் பணம் பறித்த ரவுடியை, போலீசார் கைது செய்தனர்.

கொருக்குப்பேட்டை, கோபால் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ், 19. இவர், நேற்று முன்தினம் காலை சிந்தாதிரிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே நடந்து சென்றார்.

அப்போது, மர்ம நபர் ஒருவர் கத்தி முனையில், இவரது சட்டை பாக்கெட்டிலிருந்த, 1,800 ரூபாயை பறித்துச் சென்றார்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதில், சிந்தாதிரிப்பேட்டை, என்.என்.காலனி பிரதீப், 27, என்பதும், 'ஏ' பிரிவு ரவுடி என்பதும் தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு போலீசார் இவரை கைது செய்து, கத்தி மற்றும் 150 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us