ADDED : அக் 14, 2024 02:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேசின் பாலம்:புளியந்தோப்பு, குருசாமி நகர் ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் பாபு, 49. இவர், நேற்று முன்தினம் காலை 6:30 மணியளவில், 'பவுடர் மில்ஸ்' சாலை வழியாக நடந்து சென்றார். அவரை வழிமறித்த நான்கு பேர் கும்பல், அவரது கன்னத்தில் அறைந்து, அவரிடம் இருந்து 600 ரூபாய் பறித்து தப்பினர்.
புகாரை விசாரித்த பேசின் பாலம் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட புளியந்தோப்பைச் சேர்ந்த சாகுல் ஹமீது, 25, ரஞ்சித்குமார், 40, சந்திரன், 22, மற்றும் அஜய், 19, ஆகிய நான்கு பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.
இதில் சாகுல் ஹமீது, ரஞ்சித் குமார், சந்திரன் மீது அடிதடி, மிரட்டல் வழக்குகளும், அஜய் மீது 'போக்சோ' வழக்கும் நிலுவையில் உள்ளன.