ADDED : அக் 15, 2024 12:30 AM
அ நிறம் | அளவு
சென்னை, பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், 21. தனியார் நிறுவன துாய்மை பணியாளர். நேற்று கே.பி.பூங்கா பகுதியில் இருசக்கர வாகன ஓட்டியிடம் 'லிப்ட்' கேட்டுள்ளார்.
இருசக்கர வாகன ஓட்டி அவரை ஏற்றிக் கொண்டு நேரு விளையாட்டு அரங்கம் அருகே சென்ற போது, திடீரென வாகனத்தை நிறுத்தினார்.
இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சரவணனை மிரட்டி அவரிடமிருந்து, 2,500 ரூபாயை பறித்து தப்பிச் சென்றார்.
சம்பவம் குறித்து பெரியமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
