ADDED : அக் 18, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீட்டில் 10 சவரன் கொள்ளை
பூந்தமல்லி: பூந்தமல்லி, லட்சுமிபுரத்தில் வசிப்பவர் திருமலை, 51. இவர், மாங்காடு அடுத்த ரகுநாதபுரத்தில் புதிதாக கட்டும் வீட்டை பார்வையிட, குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் சென்றிருந்தார்.
மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பிரோவில் வைத்திருந்த 10 சவரன் நகை திருடப்பட்டிருந்தது. பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.