/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவனுக்கு ரோபோட்டிக் முறையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
/
சிறுவனுக்கு ரோபோட்டிக் முறையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
சிறுவனுக்கு ரோபோட்டிக் முறையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
சிறுவனுக்கு ரோபோட்டிக் முறையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
ADDED : மே 23, 2025 12:23 AM

சென்னை, ஐந்து வயது சிறுவனுக்கு, ரோபோட்டிக் முறையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து, ரேலா மருத்துவமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, மருத்துவமனையின் தலைவர் டாக்டர் முகமது ரேலா கூறியதாவது:
ஹரியானாவைச் சேர்ந்த தம்பதிக்கு முதலில் பிறந்த குழந்தை சில நாட்களில் இறந்தது. பரிசோதனையில் மரபணு சார்ந்த பாதிப்புகள் காரணமாக இறந்தது தெரியவந்தது. இரண்டாவதாக குழந்தை பிறந்ததும், அதற்கும் மரபணு சார்ந்த பாதிப்புகள் இருக்கலாம் என, முன்கூட்டியே பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், மரபணு சார்ந்த யூரியா சுழற்சி குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது. இந்த குறைபாடு காரணமாக, உணவில் இருந்து புரதங்களை முறையாக செரிமான செயல்முறையை கல்லீரலால் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இது, மூளையை பாதிப்பதுடன், ரத்தத்தில் அதிக தீங்கு விளைவிக்கும் அமோனியா சேரக்கூடும். இதற்கு, கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை மட்டுமே தீர்வாக இருந்தது. எனவே, தாயிடமிருந்து கல்லீரல் தானமாக பெறப்பட்டது. பெரியவர்களுக்கு செய்வதைவிட, ஐந்து வயது சிறுவனுக்கு செய்வது மிகவும் சிக்கலான ஒன்று.
எனவே, ரோபோட்டிக் செயல்முறையில், சிறிய ரத்த நாளங்களில் நுண்ணோக்கியின் வாயிலாக தோற்றத்தை பெரிதாக்கி, நுட்பமாக தையலிடப்பட்டு, மிக சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
குழந்தைகளுக்கான கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சையை, முற்றிலும் ரோபோட்டிக் செயல்தளத்தை பயன்படுத்தி செய்திருப்பது, உலகில் முதல்முறை. இச்சிகிச்சை முறையில், சிறுவனின் வயிற்றில் தழும்புகள் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.