தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரோபோட்டிக் சிகிச்சை திட்டம் அப்பல்லோவில் துவக்கம்

 ரோபோட்டிக் சிகிச்சை திட்டம் அப்பல்லோவில் துவக்கம்

 ரோபோட்டிக் சிகிச்சை திட்டம் அப்பல்லோவில் துவக்கம்


UPDATED : மார் 15, 2026 08:52 AM

ADDED : மார் 14, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 15, 2026 08:52 AM ADDED : மார் 14, 2026 05:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: அப்பல்லோ மருத்துவமனை சார்பில், அப்பல்லோ சர்வதேச கொலோரெக்டல் கருத்தரங்கம் சமீபத்தில் நடந்தது. இதில், சர்வதேச நாடுகளைச் சேர்ந்த முன்னணி அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர்.

கருத்தரங்கில் குடல் மருத்துவ பராமரிப்பின் வேகமான வளர்ச்சி குறித்தும், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை, டிஜிட்டல் அறுவை சிகிச்சை தளங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கருத்தரங்கில் முக்கிய அம்சமாக, சென்னையில் உள்ள அப்பல்லோ புரோட்டான் கேன்சர் சென்டரில், சிக்கலான மலக்குடல் புற்று நோய்களைக் கையாள வசதியாக, ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மற்றும் டெலிசர்ஜரி என்ற ஏ.ஆர்.சி., என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

Image 1549274

இதுகுறித்து, குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் கூறுகையில், ''இன்றைய காலகட்டத்தில் மலக்குடல் புற்றுநோய் சிகிச்சைக்கு, ரோபோட்டிக் அறுவை சிகிச்சை போன்ற தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு அவசியம்.

சிக்கலான இடுப்புப் பகுதி அறுவை சிகிச்சைகளில் துல்லியத்தை அதிகரிப்பதோடு, நோயாளிகளின் வாழ்க்கை தரத்தைப் பாதுகாத்து, சிறந்த பலன்களை தருகிறது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us