தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மெரினாவில் 'ரோப்கார்' சேவை

 மெரினாவில் 'ரோப்கார்' சேவை

 மெரினாவில் 'ரோப்கார்' சேவை


ADDED : பிப் 19, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில், மெரினா கடற்கரையில், 'ரோப் கார்' வசதி, பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பு வழித்தடம் உள்ளிட்ட 90 திட்டங்களை, மேயர் பிரியா அறிவித்தார். அதன் விபரம்:

மாநகராட்சி பள்ளி மாணவ - மாணவியருக்கு யோகா மற்றும் தற்காப்புக்கலை பயிற்சி, தமிழ் - ஆங்கில அகராதி, உளவியல் ஆலோசனை வழங்கப்படும்.

விரிவாக்க பகுதி மாணவ - மாணவியருக்காக பேருந்து வசதிகள் மற்றும் தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளிகள் விரிவாக்கம் செய்யப்படும்.

மாநகராட்சியில் முதற்கட்டமாக 60 பூங்காக்களில் அறிவியல் பூர்வமாக மேம்பாடு, ஐந்து கோடி ரூபாயில், 25 இடங்களில் ஸ்பாஞ்ச் பார்க் எனு ம் நீர் உறிஞ்சும் பூங்காக்கள், ஐந்து பூங்காக்களில் சிறப்பு குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு மைதானங்களில் நீர் உறிஞ்சும் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்கப்படும் .

மாநகராட்சியின் 30 நீர்நிலைகள், 100 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும். நீர்வழி கால்வாய்களில் தடுப்புச்சுவர் இல்லாத இடங்களில், 55 கோடி ரூபாய் மதிப்பில், வெள்ள தடுப்புச்சுவர் அமைக்கப்படும்

சிறப்பு திட்டங்கள்

 பகிங்ஹாம் கால்வாய் வழித்தடத்தில் நடைபாதை, மிதிவண்டி பாதை, 'மியவாக்கி' குறுங்காடு உள்ளிட்டவை, 45 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்

 மாநகராட்சியில் உள்ள கடற்கரைகளை இணைக்கும் வகையிலும், மேம்பால ரயில், மெட்ரோ ரயில் நிலையம், பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படும். புறநகர் ரயில் நிலையங்களை இணைக்கும் வகையிலும், 25 கி.மீ., 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நடைபாதை, மிதிவண்டி பாதை அமைக்கப்படும்

 பள்ளி மாணவ - மாணவியர் பாதுகாப்பாக செல்வதற்காக 50 கி.மீ., துாரத்திற்கு வழித்தடங்கள், 200 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்

 மின்ட் சாலை - வண்ணாரப்பேட்டை மெட்ரோ; சேப்பாக்கம் - மெரினா ஆகிய இடங்களில், 40 கோடி ரூபாய் மதிப்பில் பன்முக போக்குவரத்து ஒருங்கிணைப்பு மையங்கள், 40 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்படும்

 மாநகராட்சியில், ஸ்மார்ட் பார்க்கிங் மேலாண்மை திட்டம், பொது - தனியார் கூட்டாண்மையில், 20 இடங்களில் செயல்படுத்தப்படும்

 மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் அண்ணாதுரை நினைவிடம் வரை, 'ரோப் கார்' வசதி அமைக்கப்படும்.

பொது சுகாதாரம்

 360 சுகாதார மையங்களில், கருப்பை வாய் புற்றுநோயை உருவாக்கும் எச்.பி.வி., வைரஸ் பரிசோதனை வசதி ஏற்படுத்தப்படும்

 தெருநா ய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் திட்டம், வடக்கு வட்டார பகுதியில் புதிய இறைச்சி கூ டம் நிறுவப்படுவதுடன், தெற்கு வட்டாரத்தில் நிறுவ திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்

 கொசு உற்பத்தி இடங்களை கண்டறிந்து கட்டுப்படுத்தும் பணிக்கு, 25 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

மருத்துவ துறை

 மாநகராட்சியில், 24 மணி நேரம் செயல்பட்டு வரும், ஐந்து சமுதாய மகப்பேறு மருத்துவமனைகளின், பிரசவத்திற்கு பிந்தைய கவனிப்பு மையங்களி ல், 70 லட்சம் ரூபாய் மதிப்பில் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்படும்

 புழல், பாடி, போரூர் ஆகிய மூன்று மாநகராட்சி மருத்துவமனையில் இயற்கை மருத்துவ சிகிச் சை மையம், 3 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்

 மாநகராட்சியின் 16 நகர்ப்புற சமுதாய நல மையங்கள், மூன்று மகப்பேறு மருத்துவ மையங்களி ல், நீரிழிவு நோயாளிகளுக்கான நீரிழிவு விழித்திரை சிகிச்சை உபகரணங்கள், 2.30 கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us