/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கத்தியுடன் அச்சுறுத்தல் ரவுடிகள் கைது
/
கத்தியுடன் அச்சுறுத்தல் ரவுடிகள் கைது
ADDED : மே 22, 2025 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எம்.கே.பி.நகர்,வியாசர்பாடி, பீலிகான் முனீஸ்வரர் கோவில் அருகே மர்ம நபர்கள், கத்தியுடன் பொதுமக்கள் அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிவதாக, எம்.கே.பி.நகர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, கத்தியுடன் சுற்றி திரிந்த எம்.கே.பி.நகர் காவல் நிலைய பழைய குற்றவாளியான வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்த அசோக்குமார், 41, வியாசர்பாடி, அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மணிகண்டன், 29, ஆகியோரை கைது செய்தனர்.