/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள் கைது
/
மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடிகள் கைது
ADDED : மார் 27, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், மது போதையில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில், தட்டாங்குளத்தைச் சேர்ந்த விக்னேஷ், 19, என்ற நபரை, புளியந்தோப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதேபோன்று, புளியந்தோப்பு, சாஸ்திரி நகரில் அடகு கடை நடத்தி வரும் பிரகாஷ், 60, என்ற நபரை மிரட்டி, மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்ட பழைய குற்றவாளியான நரசிம்ம நகரைச் சேர்ந்த பிரதீப், 27, என்ற நபரும், புளியந்தோப்பு போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.