ADDED : பிப் 12, 2026 06:06 AM

சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என, கொடூர குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது, சென்னை மாநகர போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த, சென்னை, பனையூரைச் சேர்ந்த ரவுடிகள் அஜய் ரோகன், 36, ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகேந்திர சேதுபதி, மதுரையைச் சேர்ந்த பிரேம்குமார், 45, திருவான்மியூரைச் ராஜா, 42, மற்றும் செல்வபாரதி, 26, ஆகியோர் சென்னை மாநகர எல்லையை விட்டு வெளியேற கமிஷனர் அருண் உத்தரவிட்டு இருந்தார்.
இவர்கள், நீதிமன்ற வழக்குகள் தொடர்பாகவோ அல்லது காவல் துறையினரின் விசாரணை தொடர்பாகவோ இல்லாமல், வேறு எந்த காரணத்திற்காகவும், சென்னை மாநகர எல்லைக்குள் நுழையக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
அவரின் உத்தரவை மீறி, சென்னை மாநகர எல்லைக்குள் நுழைந்த ரவுடி பிரேம்குமார், நுங்கம்பாக்கம் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
