ADDED : ஜூன் 18, 2025 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி, ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை, சுப்புராயன் தெருவை சேர்ந்தவர் கணேசன், 60. இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே நடந்து சென்றபோது, மதுபோதையில் வந்த ஒருவர், கணேசனிடம் தகராறு செய்து, அவரை நெஞ்சில் தாக்கியுள்ளார்.
கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற கணேசன், தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், கணேசனை தாக்கிய, அதே பகுதியை சேர்ந்த ரவடி, பிரேம்குமார், 48 என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது, 27 குற்ற வழக்குகள் உள்ளன.
**