ADDED : ஏப் 10, 2026 03:02 AM
அ நிறம் | அளவு
ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம், பஜார் பகுதியில் உள்ள கடைகளில், அடையாளம் தெரியாத நபர், கத்தி முனையில் வியாபாரிகளிடம் மாமூல் வசூலிப்பதாக போலீசாருக்கு புகார் சென்றது.
அதன்படி விசாரிக்க சென்ற போலீசாரைக் கண்டதும், அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி, தப்பியோட முயன்றார்.
சாதுர்யமாக மடக்கி பிடித்த போலீசார், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.இதில் அவர், நன்மங்கலத்தை பம்மல், கவுரி அவென்யூவை சேர்ந்த இம்ரான், 29, என்பது தெரிய வந்தது.
'ஏ-' பிரிவு குற்றவாளியான இவர், பிரபல ரவுடி நாகூர் மீரானின் சகோதரர் என்பதும் தெரியவந்தது. இ தையடுத்து, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
