தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஓட்டுநரிடம் பணம் பறித்த ரவுடி கைது

ஓட்டுநரிடம் பணம் பறித்த ரவுடி கைது

ஓட்டுநரிடம் பணம் பறித்த ரவுடி கைது


ADDED : மார் 11, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 05:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராயப்பேட்டை: ராயப்பேட்டை, முத்தையா தெருவைச் சேர்ந்தவர் சந்திரன், 60; ஆட்டோ ஓட்டுநர். கடந்த 8ம் தேதி இரவு, வீடு முன் நிறுத்திய ஆட்டோவில் துாங்கி கொண்டிருந்தார்.

அப்போது மர்ம நபர் ஒருவர், அவரது சட்டை பையில் இருந்து பணம் எடுக்க முயன்றார். தடுத்த சந்திரனை கத்தியால் குத்தி, 800 ரூபாயை பறித்து தப்பினார்.

ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரித்து, இக்குற்றத்தில் ஈடுபட்ட, அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி வினோத், 26, என்பவரை நேற்று கைது செய்தனர். இவர்மீது கொலை முயற்சி, திருட்டு உள்ளிட்ட, 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மொபைல் திருடிய 4 பேர் கைது

பாண்டிபஜார்: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த அறிவானந்தம், 28, சென்னையில் உள்ள ஒரு மதுக்கூடத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் அதிகாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை யில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர், அவரை வழிமறித்து தாக்கி மொபைல் போன், 1,000 ரூபாயை பறித்து தப்பிச் சென்றனர். காயமடைந்த அறிவானந்தம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாண்டிபஜார் போலீசார் விசாரித்து, அம்பத்துாரைச் சேர்ந்த அபிஷேக், 33, ஜாபர், 22, திருமுல்லைவாயில் சைமன், 22, மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோரை, நேற்று கைது செய்தனர். இதில் சிறுவன், சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவர் களிடமிருந்து மூன்று மொபைல் போன்கள், இரு கத்திகள் மற்றும் இரு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us