/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உணவு டெலிவரி ஊழியரிடம் ரூ.2,000 பறித்த ரவுடி கைது
/
உணவு டெலிவரி ஊழியரிடம் ரூ.2,000 பறித்த ரவுடி கைது
உணவு டெலிவரி ஊழியரிடம் ரூ.2,000 பறித்த ரவுடி கைது
உணவு டெலிவரி ஊழியரிடம் ரூ.2,000 பறித்த ரவுடி கைது
ADDED : பிப் 23, 2026 05:47 AM
சென்னை: நுங்கம்பாக்கத்தில், உணவு டெலிவரி நிறுவன ஊழியரை கத்தியை காட்டி மிரட்டி, 2,000 ரூபாய் பறித்த ரவுடி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரசுல்தீன், 25; உணவு டெலிவரி ஊழியர்.
கடந்த, 20ம் தேதி, இருசக்கர வாகனத்தில் சென்று உணவு டெலிவரி செய்த பின், நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் நின்று கொண்டிருந்தார்.
அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், முகமது ரசுல்தீனிடம் கத்தியை காட்டி மிரட்டி, 2,000 ரூபாயை பறித்து தப்பினர்.
முகமது ரசுல்தீன் புகாரையடுத்து, நுங்கம்பாக்கம் போலீசார் விசாரித்து நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக், 20, ரோஷன், 20, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
இவர்களில், கார்த்திக் ரவுடி என்பதும், அவர் மீது ஏற்கனவே ஏழு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், ரோஷன் மீது ஒரு வழக்கு இருப்பதும் தெரியவந்துள்ளது.

