ADDED : ஜூன் 25, 2025 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேசின்பாலம், புளியந்தோப்பு, சிவராஜபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகர், 52 கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு மது போதையில் குருசாமி நகர் சாலையில் உள்ள ரேஷன் கடை வாசலில் படுத்து உறங்கினார்.
அப்போது அங்கே வந்த வாலிபர் ஒருவர், சந்திரசேகரிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சந்திரசேகர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த தகவலின் பேரில், பேசின்பாலம் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓட்டேரியை சேர்ந்த ராகுல், 23 என்ற வாலிபரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.