தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெயின்டரை கல்லால் அடித்து கொல்ல முயன்ற ரவுடி கைது

 பெயின்டரை கல்லால் அடித்து கொல்ல முயன்ற ரவுடி கைது

 பெயின்டரை கல்லால் அடித்து கொல்ல முயன்ற ரவுடி கைது


ADDED : ஏப் 06, 2026 10:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 10:26 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காசிமேடு:பெயின்டரை கல்லால் அடித்து கொல்ல முயன்ற ரவுடியை, போலீசார் கைது செய்தனர்.

பழைய வண்ணாரப்பேட்டை, வள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 28; பெயின்டர். இவர் சில ஆண்டுகளுக்கு முன், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது, தண்டையார்பேட்டை, விநாயகபுரத்தைச் சேர்ந்த மதன்குமார், 37 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

காசிமேடில் நேற்று முன்தினம் வந்த மதன்குமார், மணிகண்டனிடம் பேச வேண்டும் எனக் கூறி, காசிமேடில் உள்ள சுடுகாட்டிற்கு வரவழைத்தார். அங்கு இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, மதன்குமார் தகாத வார்த்தைகளால் பேசி மணிகண்டனை கீழே தள்ளி தாக்கியுள்ளார்.

தொடர்ந்து, அருகில் இருந்த கல்லை எடுத்து பயங்கரமாக அடித்து தாக்கினார். இதில் மணிகண்டனுக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு '108 ஆம்புலன்ஸ்ʼ மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு மணிகண்டன் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காசிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், போதையில் மதன்குமார் மணிகண்டனை தாக்கியதும், இவர் மீது கொலை உட்பட ஐந்து வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us