/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்ணிடம் வழிப்பறி காசிமேடில் ரவுடி கைது
/
பெண்ணிடம் வழிப்பறி காசிமேடில் ரவுடி கைது
ADDED : ஜன 18, 2025 12:43 AM

காசிமேடு, காசிமேடு, இந்திரா நகரைச் சேர்ந்த, 23 வயது பெண்ணிடம், கடந்த 15ம் தேதி, மர்ம நபர் ஒருவர் மது அருந்த பணம் கேட்டார்.
அவர் மறுக்கவே, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, பெண்ணின் சேலையை இழுத்து தாக்கி, அவரது மணி பர்சில் இருந்த 200 ரூபாய் எடுத்து தப்ப முயன்றார். சத்தம் கேட்டு வெளியே வந்த பெண்ணின் கணவரையும், கத்தியை காட்டி மிரட்டி தப்பினார்.
இது குறித்து காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டனர்.
இதில், காசிமேடு, இந்திரா நகர் ஹவுசிங் போர்டைச் சேர்ந்த பழைய குற்றவாளியான ஸ்ரீதர், 30, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். ஸ்ரீதர் மீது, 7 கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.