ADDED : பிப் 11, 2025 01:12 AM
அ நிறம் | அளவு
அரும்பாக்கம்,அரும்பாக்கம், திருபூர் குமரன் தெரு, 'ஜி' பிளாக் பகுதியை சேர்ந்தவர் ரவுடி பிச்சி என்ற பாஸ்கரன், 32.
பிரபல ரவுடி, அரும்பாக்கம் ராதாவின் கூட்டாளியான இவர் மீது, கொலை, கொலை முயற்சி என, 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சிறையில் உள்ள ரவுடி ராதாவின் அறிவுறுத்தல்படி, எதிரி ஒருவரை தீர்த்துக்கட்ட, பாஸ்கரன் திட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அதேசமயம், பல்வேறு வழக்குகளில் தலைமறைவாகவும் இருந்துள்ளார்.
இதையறிந்த போலீசார், அரும்பாக்கத்தில் பதுங்கி இருந்த பாஸ்கரனை, நேற்று அதிகாலை கைது செய்து, அவரது கூட்டளிகளை தேடி வருகின்றனர்.
