ADDED : ஜூலை 15, 2026 09:03 PM
அ நிறம் | அளவு
அயனாவரம்:அயனாவரத்தில் ரோந்து போலீசாரிடம் கஞ்சாவுடன் ரவுடி சிக்கினார்.
அயனாவரம், கொன்னுார் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபரை பிடித்து சோதனையிட்டனர். அவரிடமிருந்து 400 கிராம் கஞ்சா மற்றும் 1,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், அவர் ஆவடி, வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளியான ரவுடி சஞ்சீவ் குமார் 31 என்பது தெரியவந்தது. ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
