/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவுடி நாகேந்திரன் சிறையில் அடைப்பு
/
ரவுடி நாகேந்திரன் சிறையில் அடைப்பு
ADDED : ஏப் 24, 2025 12:22 AM
சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், சென்னையைச் சேர்ந்த ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டார்.
அவர், ஏற்கனவே ஆயுள் தண்டனை கைதியாக, வேலுார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சிறையில் இருந்து ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சதி திட்டம் தீட்டியது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
நாகேந்திரனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், சிறைத்துறை அதிகாரிகள் நாகேந்திரனை, ராணிப்பேட்டையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்து இருந்தனர். சிகிச்சை முடிந்து அவர் மீண்டும் வேலுார் சிறையில் அடைக்கப்பட்டார்.
*

