தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரவுடி தற்கொலை

ரவுடி தற்கொலை

ரவுடி தற்கொலை


ADDED : அக் 06, 2025 03:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2025 03:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பம்மல்: பம்மல் அடுத்த அனகாபுத்துார் பகுதியை சேர்ந்தவர் குமரகுரு, 34. சரித்திர பதிவேடு குற்றவாளி.

போதை பழக்கத்திற்கு அடிமையான குமரகுரு, தன் கையை பிளேடால் அடிக்கடி கிழித்துக்கொள்ளும் பழக்கம் உடையவர்.

நேற்று முன்தினம் இரவு, தன் தாய் செல்லக்கனியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அதனால், அருகில் உள்ள இரண்டாவது மகன் வீட்டிற்கு சென்ற செல்லக்கனி, இரவு அங்கேயே தங்கினார். நேற்று காலை, செல்லக்கனி வீட்டிற்கு சென்றபோது, வீட்டின் அறையில் குமரகுரு துாக்கிட்டு இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

தகவல் அறிந்து வந்த சங்கர் நகர் போலீசார், குமரகுரு உடலை பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us