/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெத் ஆம்பெட்டமைன் வழக்கு ராயப்பேட்டை வாலிபர் கைது
/
மெத் ஆம்பெட்டமைன் வழக்கு ராயப்பேட்டை வாலிபர் கைது
ADDED : பிப் 16, 2025 04:10 AM

சேத்துப்பட்டு:சேத்துப்பட்டு, ஜோதியம்மாள் நகர், நமச்சிவாயபுரம் பாலம் அருகில், மெத் ஆம்பெட்டமைன் கடத்துவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, கடந்த 7ம் தேதி, கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் போதை பொருள் கடத்தி, புதுச்சேரியை சேர்ந்த பைஜூர் ரகுமான், 33, ஆவடி கண்டி சுனில்பாபு, 23, கிருபாகரன், 28, ஆகாஷ், 27 ஆகிய நால்வர் சிக்கினார்.
இவர்களிடமிருந்து, 3.6 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 90 கிராம் கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான ராயப்பேட்டை, ஆசாத் நகரைச் சேர்ந்த பாலஹரி நிவா, 26 என்பவர், நேற்று முன்தினம் இரவு சிக்கினார். அவரிடமிருந்து, 0.7 கிராம் மெத் ஆம்பெட்டமைன் மற்றும் ஒரு 'ஐ போன்' பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின், நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.