/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓடும் மின்சார ரயிலில் ஆர்.பி.எப்., விழிப்புணர்வு
/
ஓடும் மின்சார ரயிலில் ஆர்.பி.எப்., விழிப்புணர்வு
ADDED : பிப் 10, 2025 03:12 AM

சென்னை:பெண் பாதுகாப்பான பயணம் குறித்து, ரயில்வே பாதுகாப்பு படையினர், மின்சார ரயில்களில் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில், பெண்களின் பாதுகாப்பு அம்சங்கள், உதவி எண்கள், அவசர நேரத்தில் எவ்வாறு உதவி கோருவது உள்ளிட்ட குறித்து, ரயில்வே பாதுகப்பு படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மாம்பலம் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பர்சா பிரவீன் தலைமையில், ரயில்வே பாதுகாப்பு படையினர் மின்சார ரயில் பயணித்தபடி. நேற்று முன்தினம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெண்கள் பெட்டியில், ஆண் பயணியர் வந்தாலும், பெண்களிடம் தகாத முறையில் நடக்க முயன்றாலும், உடனே '139' என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.