/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1 கோடி மோசடி வாலிபருக்கு 'காப்பு'
/
ரூ.1 கோடி மோசடி வாலிபருக்கு 'காப்பு'
ADDED : பிப் 13, 2024 12:29 AM

சென்னை, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சண்முகம், 47. இவர், சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.
அதில், சென்னையிலுள்ள தனியார் ஏஜன்சி, கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாக நாளிதழ்களில் விளம்பரம் செய்து இருந்தது.
இதைப் பார்த்து நான், என் மகனின் வேலைக்காக அந்த ஏஜன்சிக்கு, 14.25 லட்சம் ரூபாயை, வங்கி பரிவர்த்தனை வாயிலாக கொடுத்தேன். ஆனால், வேலை வாங்கித் தராமல் தலைமறைவாகி விட்டார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
புகாரின்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
இதில், சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சிவராஜ், 33, என்பவர், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 23 பேரிடம், 1 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.