/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.ஒரு கோடி கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல்
/
ரூ.ஒரு கோடி கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல்
ADDED : மே 30, 2025 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை :தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர்ரக கஞ்சா, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, சென்னைக்கு, சில தினங்களுக்கு முன், விமானம் ஒன்று வந்தது.
அதில் வந்த பயணியரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினர்.
அப்போது, சுற்றுலா விசாவில் பாங்காக் சென்று திரும்பிய ஆண் பயணி மீது, சந்தேகம் ஏற்பட்டது.
அவரது உடைமைகளை, அதிகாரிகள் சோதித்து பார்த்தனர். அதில் 970 கிராம் உயர் ரக கஞ்சா இருந்துள்ளது. 1 கோடி ரூபாய் மதிப்புடைய கஞ்சாவை, பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட ஆண் பயணியிடம் இது குறித்து விசாரிக்கின்றனர்.