/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கைதான சிறுவர்களை தாக்கிய ஏட்டுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
/
கைதான சிறுவர்களை தாக்கிய ஏட்டுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
கைதான சிறுவர்களை தாக்கிய ஏட்டுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
கைதான சிறுவர்களை தாக்கிய ஏட்டுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
ADDED : நவ 20, 2025 03:32 AM
சென்னை: திருட்டு வழக்கில், நான்கு சிறுவர்களை கைது செய்து துன்புறுத்திய, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றிய குணசேகரனுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கொடுங்கையூர் போலீசார், கடந்த 2016ல் நடந்த ஒரு திருட்டு வழக்கில், நான்கு சிறுவர்களை கைது செய்தனர். அவர்களை காவல் நிலையத்தில் வைத்து, ஏட்டு குணசேகரன் து ன்புறுத்தியதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்தது. இந்நிலையில் இந்த வழக்கை, நேற்று விசாரித்த ஆணைய உ றுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவு:
தற்போது சி றப்பு சப் - இன்ஸ்பெக்டராக உள்ள குணசேகரன், தன் மீதா ன குற்றச்சாட்டை மறுத்துள்ளார். ஆனால், ஆ வணங்களின் அடிப்படையிலும், ஆணையம் நடத்திய விசாரணையிலும், குணசேகரன் சிறுவர்களை தாக்கியது உறுதியாகிறது. தாங்கள் தாக்கப்பட்டது குறித்து, சிறுவர்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சிறுவர்கள் கைது செய்யப்பட்டதில், மனித உரிமை மீறல் நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, சிறுவர்கள் நான்கு பேருக்கும், தமிழக அரசு தலா 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த தொ கையை சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் குணசேகரனிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

