/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மரத்தை வெட்டியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
/
மரத்தை வெட்டியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
ADDED : ஜன 23, 2026 05:34 AM

சென்னை: கொட்டிவாக்கத்தில், சாலையில் இருந்த மரத்தை அனுமதியின்றி வெட்டியவரிடம், மாநகராட்சியினர், 1 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.
சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், கொட்டிவாக்கம், நியூ காலனி பிரதான சாலையில், தனியார் நிறுவன கட்டுமானப் பணி நடந்து வருகிறது. அந்த கட்டடத்தின் நுழைவாயில் வசதிக்காக, சாலையில் இருந்த அரச மரத்தை, அனுமதியின்றி முறைகேடாக வெட்டியுள்ளனர்.
இது குறித்து, அப்பகுதியை சேர்ந்த சமூக நல ஆர்வலர் துரை கதிர்வேல் என்பவர், சென்னை மாநகராட்சிக்கும், வனத்துறையினருக்கும் புகார் அளித்திருந்தார். இது குறித்து, இன்ஸ்டாகிராமிலும் தகவல் பரவியது.
இதையடுத்து, பெருங்குடி மாநகராட்சி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். அதில், அங்கு அனுமதியின்றி முறைகேடாக மரங்கள் வெட்டப்பட்டது உறுதியானது.
மாநகராட்சியின் அனுமதியின்றி மரக்கிளைகளை வெட்டினால், 15,000 ரூபாயும், மரத்தை வெட்டினால், 1 லட்சம் ரூபாயும் அபராதம் விதிக்க முடியும்.
அதன்படி, சம்பந்தப்பட்ட கட்டுமான உரிமையாளர் ரேவதி சதீஷ்குமார் என்பவரிடம், 1 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

