ADDED : பிப் 06, 2026 05:22 AM
அ நிறம் | அளவு
சென்னை: ஆலந்துார் மண்டலம், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் முதல் பிரதான சாலையில், தனியார் நிறுவன கட்டடத்தின் நுழைவு வாயிலில் இருந்த இரண்டு மரங்களை, அனுமதியின்றி முறைகேடாக வெட்டப்பட்டது.
இதுகுறித்த புகாரை பெற்ற ஆலந்துார் மண்டல அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, மரத்தை வெட்டிய 'ஷேர் வேர்ல்டு' நிறுவனத்துக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதற்கு உண்டான தொகையை வசூலித்தனர்.
