ரூ.10 குளிர்பானத்தில் பூஞ்சை மாதிரி ஆய்வுக்கு அனுப்பிவைப்பு
ரூ.10 குளிர்பானத்தில் பூஞ்சை மாதிரி ஆய்வுக்கு அனுப்பிவைப்பு
ADDED : செப் 18, 2026 01:42 AM

சென்னை: குளிர்பானத்தில் பூஞ்சை இருப்பது கண்டறியப்பட்டு, அதை உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டாபிராம், மேற்கு கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார், 38. இவர், ராயபுரம் மண்டலத்தில் மலேரியா பிரிவில், ஒப்பந்த ஊழியராக பணியாற்றுகிறார்.
கடந்த 15ம் தேதி சவுகார்பேட்டை, மின்ட் தெருவில் பணி நிமித்தமாக சென்றபோது, டீக்கடையில், 10 ரூபாய் 'டாடா குளுக்கோஸ்' குளிர்பானத்தை வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது.
குளிர்பானத்தில் கசப்புத் தன்மை ஏற்படவே, குளிர்பானத்தை திறந்து பார்த்தபோது, பூஞ்சை இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சக பணியாளர் ஒருவர், இதை மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்தார். திடீரென ரஞ்சித் குமாருக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு, நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.
ஏழுகிணறு காவல் நிலையத்தில் ரஞ்சித் குமார் புகார் அளித்தார். போலீசார், உணவுத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள், நேற்று முன்தினம் குளிர்பானத்தின் மாதிரிகளை சேகரித்து, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வு அறிக்கை வந்த பின்னரே தெரியவரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
