தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குப்பை பிரித்து கொடுத்தால் கிலோவிற்கு ரூ.10 சன்மானம்

குப்பை பிரித்து கொடுத்தால் கிலோவிற்கு ரூ.10 சன்மானம்

குப்பை பிரித்து கொடுத்தால் கிலோவிற்கு ரூ.10 சன்மானம்


ADDED : ஜூன் 19, 2025 12:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2025 12:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவிலம்பாக்கம், துாய்மை பாரத இயக்கம் சார்பில், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிலம்பாக்கத்தில், நேற்று மதியம் 12:00 மணிக்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இதில், பிளாஸ்டிக் ஒழிப்பு, மீண்டும் மஞ்சப்பை, மக்கும், மக்காத குப்பை பிரித்தல் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, 500 அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

தவிர, பிளாஸ்டிக் பொருட்களை பிரித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் கொடுத்தால், ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என, துண்டு பிரசுரமும் வினியோகிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி தலைவர், ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us