/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1,202 கோடி தனியார் பங்களிப்பு கழிப்பறைகள் சீரமைக்க அனுமதி
/
ரூ.1,202 கோடி தனியார் பங்களிப்பு கழிப்பறைகள் சீரமைக்க அனுமதி
ரூ.1,202 கோடி தனியார் பங்களிப்பு கழிப்பறைகள் சீரமைக்க அனுமதி
ரூ.1,202 கோடி தனியார் பங்களிப்பு கழிப்பறைகள் சீரமைக்க அனுமதி
ADDED : டிச 08, 2024 12:16 AM

சென்னை, சென்னை மாநகராட்சியில் உள்ள பொது கழிப்பறை, பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு பங்களிப்புடன் செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.
முதற்கட்டமாக, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்கள் மற்றும் மெரினா கடற்கரையில் உள்ள, 372 இடங்களில் அமைந்துள்ள, 3,270 இருக்கைகள், 430.11 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தும் பணி, 70 சதவீதம் முடிவடைந்துள்ளது.
இத்திட்டம், மக்களிடையே வரவேற்பை பெற்றதால், 7,166 இருக்கைகளுடன் கூடிய 1,002 கழிப்பறைகளையும் தனியார் கூட்டமைப்பு பங்களிப்புடன் மேம்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது.
அதன்படி, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் 285 இடங்களில் உள்ள, 2,301 இருக்கைகள், 362.60 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்.
அதேபோல், அம்பத்துார், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில், 395 இடங்களில், 2,760 இருக்கைகள், 455.43 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்.
மேலும், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில், 322 இடங்களில் உள்ள, 2,105 இருக்கைகள், 383.97 கோடி ரூபாய் மதிப்பிலும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநகராட்சியின் கழிப்பறைகளை 1,202 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்த தமிழக அரசு நிர்வாக அனுமதியை வழங்கியுள்ளது.
கழிப்பறைகளை பராமரிக்கும் பணிக்கான செலவினங்கள், சலுகைதாரருக்கு செயல்பாட்டு அளவீடுகளின் அடிப்படையில் வழங்கப்படும்.
இவை, 'இன்டிபென்டன்ட் இன்ஜினியர்' வாயிலாக கண்காணிக்கப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.