/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நான்கு வகுப்பறைகள் கட்ட ரூ.1.42 கோடி ஒதுக்கீடு
/
நான்கு வகுப்பறைகள் கட்ட ரூ.1.42 கோடி ஒதுக்கீடு
ADDED : ஆக 11, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழிங்கநல்லுார்:கே.கே.சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், கூடுதல் வகுப்பறைகள் கட்ட, 1.42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சோழிங்கநல்லுார் மண்டலம், 198வது வார்டு, கே.கே., சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ஒரு ஏக்கர் பரப்பு கொண்டது. இங்கு, 632 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். 17 வகுப்பறைகள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் மாணவ - மாணவியர் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருவதால், கூடுதல் வகுப்பறைகள் தேவைப்பட்டன. இதையடுத்து, நான்கு வகுப்பறைகள் கட்ட, 1.42 கோடி ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியது.
இதில், வகுப்பறைகள், கழிப்பறை கட்டப்பட உள்ளன. இதற்கான பணி, விரைவில் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.