/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1.50 கோடி கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல்
/
ரூ.1.50 கோடி கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல்
ADDED : அக் 26, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஏர்போர்ட்டில் 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று பகல் 12:00 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணியரை சுங்க அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது, சென்னையைச் சேர்ந்த ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்படவே, அவரது உடைமைகளை சோதனை செய்தனர். இதில், 1.5 கிலோ உயர்ரக கஞ்சா சிக்கியது. அதன் சர்வதேச மதிப்பு 1.50 கோடி ரூபாய்.
அந்த பயணியை கைது செய்து, அதிகாரிகள் விசாரிக்கின்றனர். நேற்று முன்தினம், சென்னை விமான நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

